Monday, June 29, 2009

சொர்க்கத்தின் பக்கம்

படம்: கல்யாணராமன்
இசை: ராசய்யா
பாடியவர்: எஸ்.பி.சைலஜா
பாடலாசிரியர்:
=======================

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே
பூங்காற்றே நீ பாடு (மலர்களில்)

பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானோடும்
பால்வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ணத் தேரோடும்

சொர்க்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண
என்றென்றும் உன்னோடு நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா (மலர்களில்)

நானின்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நானின்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்

இன்பத்தின் வண்ணங்கள் என்னைச் சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாணம் ஏனம்மா (மலர்களில்)

பாடலின் காணொளி இங்கே
(நன்றி: யுடியுப்)

ஆத்மார்த்தமான உறவு/ உறவின் இசை


படம்: உதிரிப்பூக்கள்
பாடியவர்: ஜானகி
இசை: ராசய்யா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
------------------------------------------
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அ
லைமோதுது
என் நெஞ்சம் அலையாடுது

பாடலின் காணொளி இங்கே
(நன்றி: யுடியூப்)

Monday, June 22, 2009

நீக்கமற...நீ...


திரைப்படம் - கோயில்புறா
இசை - ராசய்யா
பாடியவர் - கே.ஜே.யேசுதாஸ்
பாடலாசிரியர் - புலமைப் பித்தன்
--------------------------------------------------------------

வேதம் நீ
இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான்
தினமும் ஓதும்
வேதம் நீ
இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான்
தினமும் ஓதும்...வேதம் நீ

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும்
நிரந்தர சுகம் தரும்

அண்டம் பகிரண்டம்
உனை அண்டும்படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும்
தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும்
அடி உன் வடிவே

நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம்ப்புது இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் எதையும்
மணம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக் கருணை மழை
அதில் நனைய வரும்
ஒரு மனம் பரவும்

வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான்
தினமும் ஓதும்...
வேதம் நீ...இனிய நாதம் நீ...

பாடலின் காணொளி இங்கே
(நன்றி: யுடியூப்)

Tuesday, June 09, 2009

தாமரை பூத்த தடாகம்


ராகம்: ஹிந்துஸ்தானி அந்தாரி
தாளம்: ஆதி

தமிழிசை: திருச்சி ஜி தியாராஜன்
-------------------------------------------------

தாமரை பூத்த தடாகமடி-செந்

தாமரை பூத்த தடாகமடி
தமிழ்மனத்தேன் பொங்கி பாயுதடி-ஞானத்
தமிழ்மனத்தேன் பொங்கி பாயுதடி
பாமாலையால் வற்றா பொய்கையடி-தமிழ்

பைங்கிளிகள் சுற்றி பாடுதடி-ஞானத்

தமிழ்மனத் தேன் பொங்கி பாயுதடி
காவியச்சோலை அதன் கவி அழகே-பெரும்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே

ஆவி மகிழும் தமிழ் தென்றலடி-இது

அமுதினை கொட்டுது பார் இதனருகே-ஞானத்
தமிழ்மனத் தேன் பொங்கி பாயுதடி

பாடலின் சிறியதொரு ஒலிப்பேழை இங்கே
(நன்றி:பி.பி.சி. தமிழோசை)

இசைத்தாய்



கானமுகிற் கூட்டம்
கவினுறு தேமதுரமழை
ஞான இசைவெள்ளம்
நமைவிட்டுப் போகவில்லை

தெய்வத்தமிழெடுத்து
தீஞ்சுவைசேர் பாகுழைத்த
மெய்ஞானப்பழத்தின்
சுவைமேதினியில்
நின்றினிக்கும்

- யாரோ

பகிர்வு


மனதிற்கு பிடித்த சில பாடல்கள்...பதிவுகளாய்!
தமிழ் + இசை = அமுது