Monday, June 29, 2009

சொர்க்கத்தின் பக்கம்

படம்: கல்யாணராமன்
இசை: ராசய்யா
பாடியவர்: எஸ்.பி.சைலஜா
பாடலாசிரியர்:
=======================

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே
பூங்காற்றே நீ பாடு (மலர்களில்)

பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானோடும்
பால்வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ணத் தேரோடும்

சொர்க்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண
என்றென்றும் உன்னோடு நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா (மலர்களில்)

நானின்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நானின்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்

இன்பத்தின் வண்ணங்கள் என்னைச் சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாணம் ஏனம்மா (மலர்களில்)

பாடலின் காணொளி இங்கே
(நன்றி: யுடியுப்)

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தமிழ் + இசை = அமுது